AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறந்தவரின் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி தர வேண்டுமா?.. விதிகள் கூறுவது என்ன?

Deceased Person Documents | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார், பான் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் இறந்துவிட்டால் அந்த நபரின் ஆவணங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து பார்க்கலாம்.

இறந்தவரின் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி தர வேண்டுமா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Aug 2026 00:18 AM IST

இந்திய குடிமக்களுக்கு அரசு ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளிட்டவற்றை வழங்குகிறது. தனிமனித அடையாளம், வாக்களிப்பது, வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மையமாக கொண்டு இந்த தனித்தனி அடையாள ஆவணங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆவணங்களை ஒருவர் தனது கடைசி காலம் வரை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில், ஒருவர் இறந்த பிறகு அவரது ஆதார், பான், வாக்காளர் அடையாள் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இறப்புக்கு பிறகு ஒருவரின் ஆதார் கார்டை என்ன செய்வது?

ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது என தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஒருவர் உயிரிழந்த பிறகு அவருக்கான இறப்பு சான்றிதழை வாங்கினாலே அவரது ஆதார் கார்டு ரத்து செய்யப்படும் என பலரும் நினைத்துளனர். ஆனால், அது அப்படி அல்ல. ஆதார் கார்டை இறப்பு தேதியை வைத்து ஒருபோது புதுப்பிக்க முடியாது. இறந்த நபரின் ஆதார் கார்டை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எந்தவித அவசியமும் இல்லை. ஆனால், பாதுகாப்பு கருதி ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?

இறப்புக்கு பிறகு ஒருவரின் பான் கார்டை என்ன செய்வது?

இந்தியாவில் எந்தவித நிதி சார்ந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு பான் கார்டு முதன்மை ஆவணமாக கோரப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட சேவைகளுக்கு பான் கார்டு முக்கியமாக உள்ளது. ஒருவர் இறந்த பிறகு அவரது பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை எந்தவித கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கவில்லை. எனவே, உங்களது வேலைகள் முடிந்த பிறகு வேண்டும் என்றால் பான் கார்டை சமர்ப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us