AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : அதிரடி உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் இப்படிய?.. தலைசுற்றிய நகை பிரியர்கள்!

Gold and Silver Price In Chennai Today | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : அதிரடி உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் இப்படிய?.. தலைசுற்றிய நகை பிரியர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Aug 2026 10:42 AM IST

சென்னை, ஆகஸ்ட் 20 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 20, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை – காரணம் என்ன?

2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக அமையவில்லை. காரணம், ஆண்டு தொடக்கத்தில் உயர்வை சந்தித்து வந்த தங்கம், அதன் பிறகு படிப்படியாக சரிய தொடங்கியது. குறிப்பாக ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து ரூ.13,000-க்கு விற்பனையானது. அந்த சூழலில் தங்கம் சில காலம் மட்டுமே குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு, ஆண்டு இறுதியில் மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் என கணிப்புகள் வெளியாகி வந்தது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!

பொருளாதார நிபுணர்களின் கணிப்பு படி, தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்து ரூ.14,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வட்டியே இல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!

தங்கம் விலை இவ்வாறு தொடர் விலை உயர்வை சந்திக்கும் பட்சத்தில் ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேலும், ஒரு சவரன் ரூ.1,20,000-க்கு மேலும் விற்பனையாகும் என்ற சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us