EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!
8,000 Crores Unclaimed Money In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்குகளில் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு சுமார் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. அதாவது இபிஎஃப்ஓ அமைப்பில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது பணியின் போதே எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேட்பாரற்று கிடக்கும் ரூ.8,000 கோடி பணம்
கடந்த 4 ஆண்டுகளில் பிஎஃப் (PF – Provident Fund) கணக்குகளில் சுமார் ரூ.8,000 கோடி பணம் கேட்பாரற்று கிடப்பதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியதாவது, 2024 ஆம் நிதியாண்டில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளின் எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார்.




இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தொடர்ந்து அதிகரித்து வரும் தொகை
குறிப்பாக ஒவ்வொரு கணக்கில் இருக்கும் பணமும் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உதாரணமாக 2021 ஆம் நிதியாண்டில் ரூ.33,513 ஆக இருந்த தொகை, 2024 ஆம் நிதியாண்டில் ரூ.39,460 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2021 ஆம் நிதியாண்டு முதல் 2024 ஆம் நிதியாண்டு வரை செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கைகள் எவ்வளவு, கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!
கணக்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது
2021 ஆம் நிதியாண்டில் 11,72,923 ஆக இருந்த செயல்படாத கணக்குகளில் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டில் 13,41,848 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல 2023 ஆம் நிதியாண்டில் 17,44,518 ஆக இருந்த செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 21,55,387 ஆக அதிகரித்துள்ளது. 2021 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 84 சதவீத கணக்குகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.