Gold Price : நான்காவது நாளாக உயர்வை சந்தித்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
Gold Price Hiked And Silver Price Remain Same In Chennai | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 18 : புவிசார் பதற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று (ஆகச்ட் 18, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது. நான்காவது நாளாக உயர்வை சந்தித்துள்ள தங்கம், கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம்
ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!
ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காமல் தங்கம் இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இன்று (ஆகஸ்ட் 18, 2026) தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.