AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

Important Rules Changed In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் பணம் எடுப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Aug 2026 23:58 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. நவீன் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஊழியர்கள் சேவைகளை பெறும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுப்பது குறித்த விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்தை எடுப்பதில் வந்த முக்கிய மாற்றங்கள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகளிலும், முறைகளிலும் பெரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் பிஎஃப் பணத்தை விரைவாக எடுப்பது மட்டுமன்றி, பல்வேறு சிக்கல்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

75 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்

புதிய விதி மூலம் வேலைவாய்ப்பு இழப்பு, மருத்துவ செலவுகள், கல்வி, வீடு வாங்குவது, வீட்டுக் கடனை அடைப்பது போன்ற முக்கியமான விஷயங்களுக்கு பண தேவை ஏற்படும் பட்சத்தில் எந்தவித தடையுமின்றி 75 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!

13 காரணங்கள்

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கான காரணங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தமுள்ள 13 காரணங்கள் அடிப்படை தேவை, வீடு விவகாரம், தனிப்பழை சூழ்நிலை ஆகியவை என வெறும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கால அளவு குறைப்பு

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 36 மாதங்கள் பணியில் இருந்தாக வேண்டும் என்ற விதி இருந்தது. அது தற்போது வெறும் 12 மாதங்களாக குறைகப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?

பணத்தை எடுக்கும் எண்ணிக்கை

ஊழியர் தனது பிஎஃப் பணத்தை கல்வி தொடர்பான தேவைகளுக்கு மொத்தம் 10 முறை பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திருமணம் தொடர்பாக 5 முறை பிஎஃப் பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

25 சதவீதம் தொகை முடக்கம் செய்யப்படும்

ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 25 சதவீதம் பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பதை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

Follow Us