AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்? வெளியான பரபரப்பு தகவல்

Tender Rule Violation : தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் முதல்வர் விஜய்யன் அலுவலகத்தை மேம்படுத்துவதற்காக கோரிய டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல்களும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்? வெளியான பரபரப்பு தகவல்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Aug 2026 10:42 AM IST

சென்னை, ஆகஸ்ட் 18 :  முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்ட நிலையில் அதில் தற்போது முறைக்கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நிர்வாக வசதிக்காக முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்குக்கு மாற்றுவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன் படி நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10வது தளத்தில் புதிய முதல்வர் அறை, தனி செயலர்களுக்கா அலுவலகங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.5.54 கோடியில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்?

வெளியான டெண்டர் தொடர்பான அறிவிப்பில் பிளாக் 1-ல் நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்த ரூ.2.41 கோடியும், பிளாக் 2-ல் ரூ.2.01 உள் கட்டமைப்பு பணிகளுக்கும் கோடியும் , பிளாக் 3-ல் இதர பணிகளுக்காக ரூ.1.12 கோடியும் என மொத்தமாக ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.

இதையும் படிக்க : இனி முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை – சிறப்பு திட்டத்தை அறிவித்த அமைச்சர் அருண்ராஜ்

இந்த நிலையில் தான் தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் முதல்வர் விஜய்யன் அலுவலகத்தை மேம்படுத்துவதற்காக கோரிய டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிகளுக்கான டெண்டர், கடந்த ஆகஸ்ட் 13, 2026 அன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, 4 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 17, 2026 அன்று இணையதளத்தில் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் டெண்டர்களின் மதிப்பு ரூ.50 லட்சத்குக்கும் மேல் இருந்தால் இணைய வழியில் வெளியிடப்படும் என்றும் ரூ.2 கோடிக்கும் மேல் இருந்தால் அவற்றுக்கான கோரிக்கையை சமர்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்பது விதி என கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை மேம்படுத்துவதற்கா டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகசாம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செய்தித் தாள்களில் டெண்டரின் மதிப்பு ரூ.5.54 கோடி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் டெண்டரின் தொகை வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் என்று, முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் அலுவலக பணிக்கான டெண்டரில் விதிமீறல் கண்டறியப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இது குறித்து விரைவில் விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us