AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குறைந்த தங்கம் விலை – தங்கம் வாங்க சரியான தருணமா? இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Update : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை ஆகஸ்ட் 19, 2026 இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலையை மட்டும் வைத்து நகை வாங்க திட்டமிடுவது சரியாக இருக்காது. 

குறைந்த தங்கம் விலை – தங்கம் வாங்க சரியான தருணமா? இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Aug 2026 11:10 AM IST

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை ஆகஸ்ட் 19, 2026 இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது. ஈரான் போர், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜூலை, 2026 மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 17, 2026 நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபய் அதிகரித்து ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனையானது.

குறைந்த தங்கம் விலை

அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஆகஸ்ட் 18, 2026 நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,14,320 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் ஆகஸ்ட் 19, 2026 தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 85 குறைந்து, ஒரு கிராம் 14,205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 5,000 ரூபாய் குறைந்து 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : EPFO : இபிஎஃப்ஓ விதிகளில் வந்த மேஜர் மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும்  போர் சூழல்  மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ஆகியவை இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு சரிவு ஆகியவையும் தங்கத்தின் விலை உயர்வு காரணமாகின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் வரும் நாட்களில் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கத்தின் விலையை மட்டும் வைத்து நகை வாங்க திட்டமிடுவது சரியாக இருக்காது.  நகைகளை வாங்கும்போது, ​​செய்கூலி ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களும் விலையில் கூடுதலாக சேரும்.  எனவே, ஒரு சவரன் தங்கத்தின் விலையும், நகைக்காகச் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொரு நகைக்கும் நகைக்கடைக்காரர்கள் வெவ்வேறு அளவிலான செய்கூலியை வசூலிக்கிறார்கள். தற்போதைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், அதிக அளவில் தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் தினசரி விலையைச் சரிபார்ப்பதுடன், பல்வேறு நகைக்கடைக்காரர்களின் செய்கூலி போன்ற இதர கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

Follow Us