கேஸ் சிலிண்டரை LPG-ல் இருந்து PNG ஆக மாற்றினால் சலுகை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
Shifting Gas Cylinders From LPG To PNG | கேஸ் சிலிண்டர்களை எல்பிஜியில் இருந்து பிஎன்ஜியாக மாற்றம் செய்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அசத்தல் அறிவிப்பு குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரின் போது உலக நாடுகள் சில மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டன. அந்த பட்டியலில் இந்தியாவும் இருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. கேஸ் சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டரை எல்பிஜியில் இருந்து பிஎன்ஜியாக மாற்றம் செய்தால் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எல்ஜிபி தேவைக்காக வளைகுடா நாடுகளை நாடியுள்ள இந்தியா
இந்தியா தனது எல்ஜிபி தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. இதன் காரணமாக ஈரான் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கப்பல்கள் கடந்துச் செல்ல முடியாமல் போனதால் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்க்கொண்டது. அதனை தொடர்ந்து தான் இந்திய அரசு பொதுமக்களை பிஎன்ஜி இணைப்பு பெற வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?
பொதுமக்களை பிஎன்ஜிக்கு மாற கூறும் மத்திய அரசு
எல்பிஜியை போல இல்லாமல் பிஎன்ஜி மிக சுலபமாக கிடைக்கிறது. காரணம், இந்திய அரசு பிஎன்ஜியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக எந்த வித தடையுமின்றி பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டர்களை வழங்க முடியும் என்பதால், அரசு கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்களை பிஎன்ஜிக்கு மாற கூறி வருகிறது. அந்த வகையில் தான் இந்த முக்கிய அம்சத்தை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : லலிதா ஜுவல்லரி ஐபிஓ ஏலமிடல் முடிவு.. பங்கு ஒதுக்கீடு மற்றும் பட்டியலிடல் விவரங்கள்!
ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அரசு
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி சுமார் 1.74 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி இணைப்புகள் உள்ளன. இந்த எண்ணிக்கையைம் விரிவுப்படுத்த நகர்புற எரிவாயு விநியோக நிறுவனங்கள் செயலற்ற அல்லது பில் செய்யப்படாமல் உள்ள இணைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில், புதிய பகுதிகளுக்கு அமைப்பை விரிவுப்படுத்தும் ஊக்கத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.