AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Xiaomi Launched Redmi 17 5G Smartphone In India | ஜியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Sep 2026 17:12 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றுதான் ரெட்மி (Redmi). இதன் தாய் நிறுவனம் ஜியோமி (Xiaomi) ஆகும். இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அசத்தலான அம்சங்களை கொண்ட ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை (Redmi 17 5G Smartphone) தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன்

ஜியோமி நிறுவனம், இந்தியாவில் தனது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7,900 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜர், 45 வாட்ஸ் திறனை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரிவர்ஸ் சார்ஜிங் செய்துக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசசர் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதனை 2டிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.41,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது. எம்ஐ, ஜியோமி மற்றும் அமேசான் தளங்கள் மற்றும் கடைகளில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us