புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?
Is Apple Going To Introduce Apple Ultra | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்போது, ஆப்பிள் ஐபோன் அல்ட்ரா என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை (Smartphone) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 09, 2026 அன்று தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரீஸின் சிறப்பு அம்சமாக ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள இந்த மடிக்கக்கூடிய ஐபோன் அல்ட்ராவின் (Apple Ultra) சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Surprise and Shine நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய படைப்பு
செப்டம்பர் 09, 2026 அன்று ஆப்பிள் நிறுவனம் நடத்தவுள்ள நிகழ்வுக்கு Surprise and Shine என பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்வில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் வரை அறிமுகம் செய்ய உள்ளது. ஆப்பிள் தனது நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் என பெயர் வைத்துள்ளதை போலவே, இந்த ஆப்பிள் அல்ட்ராவும் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.




இதையும் படிங்க : அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. முழு விவரம் இதோ!
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்
It’s official! Apple will launch new products at the next #AppleEvent on September 9th at 10 a.m. PDT 🚨
Apple is expected to announce the iPhone 18 Pro models and its first foldable iPhone at the event pic.twitter.com/nZ9cTCB4Po
— Apple Hub (@theapplehub) August 26, 2026
இந்த ஆப்பிள் ஐபோன் அல்ட்ரா ஸ்மார்ட்போன் 7.8 இன்ச் உள்திரை, 5.5 இன்ச் வெளித்திரை உடன் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஐபோனை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. ஆனால், டெக் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போனை ஐபோன் அல்ட்ரா என்ற பெயரில் அறிமுகம் செய்ய என கூறி வருகின்றன.