16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!
16 Years Old Boy From Kerala Started AI Start Up | உலகத்தையே செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏஐ ஸ்டார்ட் அப் தொடங்கி தனது தந்தைக்கே வேலை கொடுத்துள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை ஒருவர் 21 வயதில் தான் தனது படிப்பை முடித்து, வேலைக்கோ அல்லது தொழில் செய்ய கூடிய நிலைக்கோ வர முடியும். சிலருக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவர் தனது 16 வயதிலேயே ஏஐ ஸ்டார்ட் அப் (AI Start Up) நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த நிறுவனத்தில் தனது தந்தைக்கே அவர் வேலை கொடுத்துள்ளார். இந்த நிலையில், 16 வயதிலேயே சிறுவன் சாதனை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும் 16 வயது சிறுவன்
கேரளம் மாநிலம், கொச்சியின் வடக்கு எடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகுல் ஜான் அஜு. இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் இவர், செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் தனக்கு இருந்த ஆர்வத்தின் மூலம், அதனையே ஒரு தொழிலாக மாற்றியுள்ளார். இவர் 9 வயது முதல் இருந்தே ஏஐ தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் தான், பள்ளியில் அறிவியல் பாடத்திற்காக அவர் சொந்த குரலில் பேசும் MeBot ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?




15 பேருந்து வேலை கொடுத்துள்ள சிறுவன்
இந்த சிறுவன் தான் தொடங்கியுள்ள ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் மொத்தம் 15 பேருக்கு வேலை கொடுத்துள்ளார். குறிப்பாக தனது நிறுவனத்தில் தனது தந்தைக்கே வேலை கொடுத்துள்ள அவர், அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தையும் வழங்கி வருகிறார். அதுமட்டுமன்றி, இந்த சிறுவன் சுமார் 5,000 பேருந்து செயற்கை நுண்ணறிவு அம்சம் தொடர்பான பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : மாதத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
15-க்கும் மேற்பட்ட ஏஐ கருவிகளை உருவாக்கிய சிறுவன்
இந்த சிறுவன் MeBot, RESQ AI, ZapGap, Investo AI, FeedFye போன்ற 15-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்கி அசத்தியுள்ளார். அவசரகால உதவிகள் மற்றும் சட்ட உதவிகளை பொதுமக்கள் மிக எளிதாக பெறும் வகையில், கேரள மாநில அரசுடன் இணைந்து JustEase மற்றும் Rescue ஏஐ ஆகிய திட்டங்களை அவர் செய்துக்கொடுத்துள்ளார். இத்தகைய பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு அந்த சிறுவன் இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரனமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.