மாதத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,693-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 1, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இந்த வார தொடக்கம் முதலே சற்று உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,693-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, ஆகஸ்ட் 31ஆம் தேதி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 அதிரடியாகக் குறைந்திருந்தது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.1, 14,960 அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு..
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலகப் பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் படிக்க: ஒரு மாத EMI-ஐ தவர விட்டால் என்ன நடக்கும்?.. இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதனிடையே, வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் சந்தை நிலவரங்களை தொடர்ந்து கவனித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.