வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. குத்துயுரும் கொலையுருமான நர்சிங் மாணவி.. காட்பாடியில் EX கணவர் அதிரடி கைது!
Katpadi Crime : வேலூர் மாவட்டத்தில் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து நர்சிங் மாணவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிய முன்னாள் கணவரை காட்பாடி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கிறிஸ்டியான் பேட்டை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ஜோஸ்வின். இவர், தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சேலட் சுஜி ( 21 வயது) என்ற மகள் உள்ளார். இவர், அடுக்கம்பாறை அருகே உள்ள காட்டுப்புடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி சுஜியும், காட்பாடி, தாராபடவேடு கோவிந்த முதலி தெருவை சேர்ந்த ஜீவா என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.
நர்சிங் மாணவியை வெட்டிய முன்னாள் கணவர்
இதன் காரணமாக, இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். அதன் அடிப்படையில், இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றனர். இந்த நிலையில், நர்சிங் மாணவி சுஜி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அவரது முன்னாள் கணவர் ஜீவா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஜீவாவை, மாணவி சுஜி கட்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த ஜீவா மறைத்து வைத்திருந்த அறிவாளால் சுஜியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினார்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!




மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் மாணவி
இதில், வலி தாங்க முடியாமல் சுஜி சத்தம் போட்ட நிலையில், அக்கம், பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த ஜீவா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுஜியின் தாய் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜாமீனில் வெளிவந்த முன்னாள் கணவர் கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மாணவி சுஜியின் முன்னாள் கணவர் ஜீவாவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதில் ஜாமினில் வெளிவந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?