AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!

CM Vijay Visit Britain : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10- ஆம் தேதி பிரிட்டன் செல்ல இருப்பதாகவும், அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 01 Sep 2026 08:49 AM IST

தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற செப்டம்பர் 10- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பிரிட்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே, முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தி உள்ளது. இதில், செமி கண்டக்டர், ஏ.ஐ. சிப் உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாடு தைவானில் வருகிற நாள்களில் நடைபெற உள்ளது. இந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தைவான் செல்ல உள்ளனர். அங்கு, செப்டம்பர் 4- ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பிரிட்டன் பயணம்

இந்த நிலையில், தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு உடன் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகிற செப்டம்பர் 10- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பிரிட்டன் செல்ல உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குழுவானது, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செப்டம்பர் 16- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தின் போது, பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.

மேலும் படிக்க: பிரதமர் வேட்பாளர் சர்ச்சை விவகாரம்… முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன!

முதல்முறை அரசு முறை வெளிநாடு பயணம்

அதன்படி, தமிழகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதல் முறையாக வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தென் மாநிலங்களில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் ஆந்திர மற்றும் தமிழக இடையே போட்டி நிலவி வருகிறது. இதில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறி சென்றிருப்பதாகவும், கை நழுவி சென்றிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு?

இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் பிரிட்டன் செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில், தொழில் நிறுவனங்களுடன் உடன்பாடு எட்டும் நிலையில், பல கோடி மதிப்பிலான முதலீடு தமிழகத்தில் குவிய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தமிழகத்தில் புதிய நிறுவனங்களும் அமைக்கப்படும்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!

Follow Us