AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொது மக்களுக்கு குட் நியூஸ்… ரேசன் கடைகளில் ரூ. 15- க்கு கோதுமை மாவு விற்பனை… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு!

Wheat Flour Sell At Ration Shops : தமிழக ரேசன் கடைகளில் ரூ. 15- க்கு ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, பெரிய வெங்காயமும் விற்கப்படுகிறது.

பொது மக்களுக்கு குட் நியூஸ்… ரேசன் கடைகளில் ரூ. 15- க்கு கோதுமை மாவு விற்பனை… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு!
ரேசன் கடைகளில் கோதுமை மாவு விநியோகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Sep 2026 08:15 AM IST

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ. 15- க்கு ஒரு கிலோ கோதுமை மாவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோதுமை மாவு பாக்கெட் வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி, ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 15- க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து கோதுமைகளை வாங்கி வந்து, அதனை ஆலைகளில் மாவாக திரித்து, ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பாக்கெட்டுகளில் கோதுமை மாவு வழங்கப்பட உள்ளது.

மற்ற மாநிலங்களை விட குறைவாக ரூ. 15- க்கு விற்க திட்டம்

ஒவ்வொரு மாநிலங்களிலும் கோதுமை மாவு எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் குறைவாக ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 15- க்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது, வெளிச்சந்தைகளில் கோதுமை மாவு விலை சராசரியாக ரூ. 60- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரத் ஆட்டா என்ற பெயரில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பாக்கெட்டுகளில் கோதுமை மாவு விற்பனை

இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு அங்காடிகளில் கோதுமை மாவு பாக்கெட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் மாநில அரசு மூலமாக மீண்டும் கோதுமை மாவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.

ரூ.35- க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம்

இதனை கட்டுப்படுத்தும் வகையில் வெளி மாநிலத்தில் இருந்து சுமார் 850 டன் பெரிய வெங்காயம் ரயில்கள் மூலம் திறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயங்கள் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி. இதில், நகர்புற ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35- க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 5- ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 3-ஆவது குழந்தை பெற்றால் 1 வருட சம்பளத்துடன் லீவ்.. அரசாணை வெளியீடு!

Follow Us