பொளக்கும் வெயில்.. மதுரையில் பதிவான 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1, 2026: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையில் 39 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 39.2 டிகிரி, திருச்சியில் 38.9 டிகிரி, ஈரோட்டில் 38.6 டிகிரி, வேலூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் 38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் இயல்பைவிட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: புகைப்படம், வீடியோ, ரீல்ஸுக்கு இனி இடமில்லை! – தமிழக கோயில்களில் நாளை முதல் செல்போன் தடை
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மழை:
இதனிடையே, செப்டம்பர் 6-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றோட்டத் தாழ்வுப் பகுதி காரணமாக, செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 3-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: சைலண்ட் கில்லரான கார் ஏசி.. ராணிப்பேட்டையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. தூக்கத்தில் பிரிந்த ஓட்டல் மேலாளர் உயிர்!
மேலும், செப்டம்பர் 6-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.