தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
Thaimaman Thanga Mothiram Scheme : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.755.83 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி, இந்த திட்டத்தை வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தொடக்கி வைக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் 22- ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் குழந்தைகள் கணக்கெடுப்பு
இதில், கோயம்புத்தூர் மாநகர் பகுதி மற்றும் கோயம்புத்தூர் புறநகர் பகுதி என அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் சுமார் 1,200 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதி இந்த திட்டம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் வேட்பாளர் சர்ச்சை விவகாரம்… முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன!




அரசு மருத்துவமனையில் பிரசவத்தை ஊக்குவிப்பதற்காக…
இதில், முதல் கட்டமாக வருகிற செப்டம்பர் 14- ஆம் தேதி தொடர்ந்து குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி, இந்த திட்டத்தை அண்மையில் முதல்வர் விஜய் செயல்படுத்தி இருந்தார். இதில், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், தாய்மாமன் சீராக குழந்தைகளுக்கு தங்கம் வழங்கும் பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையிலும் செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
22 காரட் தங்க மோதிரம்
இதில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 காரட் 916 தரத்துடன் கூடிய 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள ரெண்டரை 2 நிறுவனங்கள் எடுத்துள்ளது. இதில், ஆண்டுக்கு 4,40,667 தங்க மோதிரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் ரூ.1 பைசாவுக்கு எடுத்திருந்தது மிகவும் பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!