Ravi Mohan: ஹன்சிகா எப்போவுமே அப்படித்தான் – ரவி மோகன் சொன்ன நகைச்சுவை சம்பவம்!
Ravi Mohan About Hansika: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்தவருபவர் ரவி மோகன். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் நடிகை ஹன்சிகாவுடனாக நகைச்சுவை தருணங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து புதிய திரைப்படங்களும் தயாராகிவருகிறது. அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் பராசக்தி (Parasaklthi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், முக்கிய வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக கராத்தே பாபு (Karathey Babu), ஜீனி, ப்ரோ கோட் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்துவந்த இவர், தற்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.
மேலும் இவர் இயக்கும் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ரவி மோகன், எங்கேயும் காதல் பட ஷூட்டிங்கில் ஹன்ஷிகா செய்த குறும்பான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!
ஹன்சிகா குறித்து நடிகர் ரவி மோகன் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் பேசிய ரவி மோகன், “எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்கும்போது ஹன்சிகாவிற்கு வெறும் 17 வயசுதான். அவங்கள எப்போவுமே எல்லாரும் ஒரு குழந்தை மாதிரிதான் பாப்போம். ஷூட்டிங்கில் நல்ல உக்காந்து சாப்புட்டுக்கிட்டே இருப்பாங்க. நிறைய நொறுக்கு தீனி சாப்டுட்டே இருப்பாங்க. சாப்பிட்டது போதும் ஷூட்டிங்கிற்கு வாமானு நாங்க கூப்டுட்டே இருப்போம். அவர்களுக்கு கோக் என்ற ரொம்பவே பிடிக்கும். அவரின் பிறந்தநாளுக்கு கோக் பாட்டிலின் வடிவத்திலே கேக் வெட்டுனாங்க.
இதையும் படிங்க: 2 படங்களில் விஜய் சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தவறியது – ஜிவி பிரகாஷ் குமார் ஓபன் டாக்
எங்கேயும் காதல் பட ஷூட்டிங் பிரான்சில் நடந்தது. அப்போதுதான் புதுசாக நான் ஐ போன் வாங்கியிருந்தேன். இந்தியாவிலே முதலில் ஐ போன் வாங்கியது நானாக தான் இருப்பேன். ஏனென்றால் பிரான்சில்தான் ஐ போன் முதலில் வெளியானது. ஷூட்டிங்கின்போது நான் அந்த ஐ போனை யூஸ் பண்ணிட்டு இருந்தேன். திடீரென ஒரு உருவம் போனை பிடிங்கிட்டு போச்சு, நான் ஷாக் ஆகிட்டேன். யாருனு பாத்தா ஹன்சிகாதான்” என அதில் அவர் நகைச்சுவையாக பேசியிருந்தார்.
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகர் ரவி மோகனின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் தயாராகியுள்ளது. ஜீனி, கராத்தே பாபு, ப்ரோ கோட் என அடுத்தடுத்த படங்கள் தயாராகியுள்ளது. மேலும் இவர் இயக்குநராகவும் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.