வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Toll Charges Increased : தமிழகத்தில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் 2- ஆவது முறையாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதில், சுங்கக் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் 60- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 1- ஆம் தேதி) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், வாகனங்களுக்கு ஏற்றவாறு ஒரு வழி பயணம் மற்றும் மாதாந்திர கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 735 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, செங்குறிச்சி, திருச்சி வாலாஜாபாத் உள்ளிட்ட சுங்க சாவடிகளில் வாகன வகைக்கு ஏற்றவாறு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கனரக லாரி- பேருந்துகளுக்கு சுங்க கட்டணம்
இதில், கனரக லாரிக்கு ரூ. 380 சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த கட்டணம் ரூ. 20 உயர்த்தப்பட்டு ரூ. 400- ஆக வசூலிக்கப்படுகிறது. இதே போல, பேருந்துகளுக்கு தொங்க கட்டணம் ரூ. 240- இல் இருந்து ரூ. 10 உயர்த்தப்பட்டு ரூ. 250- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு முறை சுங்க சாவடி வழியாக பயணிக்கும் லாரிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ. 10 மற்றும் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ரூ. 15 உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம்.. சார்-பதிவாளர் உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!




2- ஆவது முறையாக சுங்க கட்டணம் உயர்வு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரு முறை ( ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில்) உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, மீண்டும் 2- ஆவது முறையாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் சுங்க கட்டணம் உயர்வு
இதில், விக்கிரவாண்டி சுங்க சாவடியில் காக்கட்டணம் ரூ. 15- இல் இருந்து ரூ. 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, 40- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஈரான் போரால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சைலண்ட் கில்லரான கார் ஏசி.. ராணிப்பேட்டையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. தூக்கத்தில் பிரிந்த ஓட்டல் மேலாளர் உயிர்!