AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. மேட்டூர் அணையிலிருது 3000 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. மேட்டூர் அணையிலிருது 3000 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Sep 2026 09:38 AM IST

செப்டம்பர் 1, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஜூன் மாதம் திறக்கப்படாத மேட்டூர் அணை:

பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

மேலும் படிக்க: பொது மக்களுக்கு குட் நியூஸ்… ரேசன் கடைகளில் ரூ. 15- க்கு கோதுமை மாவு விற்பனை… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு!

மேட்டூர் ஆணையிலிருந்து நீர் திறப்பு:

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் அணைக்குச் சென்று தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயப் பணிகளை மேற்கொள்ள போதிய நீர் ஆதாரம் இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் படிக்க: முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதன்முறையாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us