மொபைல் போன்கள் தடை செய்யப்பட்ட 52 கோவில்கள் எவை தெரியுமா? வெளியான விவரம்
Mobile Phone Ban : தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களில் மொபைல் போன்கள் கொண்டு செல்ல செப்டம்பர் 1, 2026 இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 52 கோவில்களின் பட்டியலையும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 1 : தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களில் மொபைல் போன்கள் கொண்டு செல்ல செப்டம்பர் 1, 2026 இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா இல்லாத செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் இதற்காக கோவில்களில் சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
52 கோவில்களில் மொபைல் போன்கள் தடை
கோவில்களில் மூலவர் சிலைகளை படம்பிடிப்பதும் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பதும் ஒரு சிலர் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கோவில் வளாகங்களில் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிரும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, கோவில்களில் மொபைல்போன்கள் எடுத்து செல்ல செப்டம்பர் 1, 2026 இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா இல்லாத சாதாரண செல்போன்களை எடுத்து செல்வதற்கு தடை இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிக்க : மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் – கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி




தடை செய்யப்பட்டுள்ள கோவில்களின் விவரங்கள்
கோவில் வளாகத்தில் மொபைல் போன்களை பாதுகாக்க பிரத்யேக பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரூ.5 செலுத்தி மொபைல் போன்களை பாதுகாக்க முடியும். இந்த நிலையில் மொபைல் போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்ட 52 கோவில்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 1. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், 2. திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், 3.திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 4. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், 5.திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 6.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், 7. இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், 8.ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், 9.அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், 10.பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், 11.மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய கோவில்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 12.மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், 13.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 14.திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 15.ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், 16.வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், 17. இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், 18. மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், 19.சுசீந்திரம் அருள்மிகு இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில், 20. திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், 21.சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,
22.தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயில், 23.குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், 24. சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், 25.நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், 26.காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், 27. மதுரை அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், 28. சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், 29.திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், 30. தஞ்சாவூர் தேவஸ்தான திருக்கோயில்கள், 31. திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், 32. மாங்காடு அருள்மிகு காமாக்ஷி அம்மன் திருக்கோயில், 33. திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
இதையும் படிக்க : தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
34. பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், 35.திருச்சி அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, 36. அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில் 37.பேரூர் அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், 38.ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் திருக்கோயில், 39. திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், 40.உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், 41.தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வேங்கட்ரமண சுவாமி திருக்கோயில், 42.பண்மொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், 43.மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில், 44.மதுரை அருள்மிகு கூடலழகர் திருக்கோயில்,
45.சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 46.ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், 47.அய்யம்பாளையம் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், 48.சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், 49.பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், 50. புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள், 51.வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், 52.சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய கோவில்களில் தடை செய்யப்பட்டுள்ளது.