தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – இத்தனை நிபந்தனைகளா? தகுதியுடையவர்கள் யார்?
Gold Ring Scheme Rules : தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி குழந்தையின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனையின் மூலம் குழந்தை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 1 : தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குழந்தை பிறப்பின் போது எதிர்பாராத விதமாக தாய் இறந்து விட்டால், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான தங்க மோதிரம், அனைத்து அங்கீகாரச் சான்றுகளுடன் தாயின் பாட்டி அல்லது பாதுகாவலரிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக, வெக அரசு தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் கடந்த ஜுன் 22, 2026 அன்று முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?




இந்த திட்டம் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் கடந்த ஜுன் 22, 2026 அன்று முதல் 4 மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் என 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக லாக்கர், அதற்கான 2 அடுக்கு பாதுகாப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான சிசிடிவி காட்சிகளை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்க மோதிரம் திட்டத்தில் யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?
- தமிழகத்தை பூர்வீகமாக சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
- அரசு மருத்துவமனையின் மூலம் குழந்தைகள் பெற்றிருக்க வேண்டும்
- கர்ப்பிணி பெண்கள் PICME மற்றும் RCH-ID பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, ஆதார்கார்டு, தொழிலாளர் நல வாரியத்தால் அளிக்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல்துறையின் முகவரி அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ் அதில் ஏதாவது ஒன்று போதுமானது.
இதையும் படிக்க : அனிதா நினைவேந்தலுக்கு ஏன் அனுமதி இல்லை? உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே விவாதம்..
புதிதாகப் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் எத்தனை குழந்தைகள் என்பதை கணக்கில் கொள்ளப்படமாட்டாது. அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எல்லாம் கிடைக்காது?
- தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்
- தனியார் மருத்துவமனையில் பிறந்தாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு
- பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்காது
- இறந்து பிறக்கும் குழந்தை