AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் கல்லூரியின் பின்புறம் 19 நல்ல பாம்புகள் – 20 பாம்புகள் மாயம்? – பரபரப்பு தகவல்

19 Cobra Hatchlings Rescued ச சென்னையின் பிரபல கல்லூரியான எத்திராஜ் கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு ஒன்றில் 19 நல்ல பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கு மேற்பட்ட பாம்புகளை தேடும் பணியில் கிண்டி வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கல்லூரியின் பின்புறம் 19 நல்ல பாம்புகள் – 20 பாம்புகள் மாயம்?  – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Sep 2026 15:02 PM IST

சென்னை, செப்டம்பர் 1 : சென்னையில் பிரபல கல்லூரியான எத்திராஜ் கல்லூரியின் பின் பகுதியில் 19 நல்ல பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியின் பின்புறம் குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியில் ஒரு பகுதி மக்கள் பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் ஆகஸ்ட் 30, 2026 நேற்றுமுன்தினம் மதியம் சில முட்டைகளை பார்த்த அவருக்கு, அது பாம்பு முட்டைகளாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் கிண்டியில் செயல்படும் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியின் பின்புறம் 19 நல்ல பாம்புகள்

தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்ததில் ஆங்கு பாம்பு முட்டைகள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. அதில் சில பொறிந்த நிலையில் காணப்பட்டிருக்கிறது. இதனால் பாம்பு குட்டிகள் அந்த பகுதியில் இருக்கலாம் என வனத்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் புதர்கள், கான்கிரீட் உடைப்புகள், புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில் வனத்துறையினர் 4 மணி நேரமாக தேடியுள்ளனர்.

இதையும் படிக்க : வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. குத்துயுரும் கொலையுருமான நர்சிங் மாணவி.. காட்பாடியில் EX கணவர் அதிரடி கைது!

அப்படி ஆய்வு செய்ததில் அந்த பகுதியில் மறைந்திருந்த 19 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு 39 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் 19 பாம்பு முட்டைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து நல்ல பாம்புகளை தேடும் பணி ஆகஸ்ட் 31, 2026 நேற்று மீண்டும் தேடுதல் பணிகள் நடைபெற்றன. ஆனால் வனத்துறையினர் எவ்வளவு தேடியும் பாம்புகள் எதுவும் பிடிபடவில்லை என கூறப்படுகிறது. இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெரிய நல்ல பாம்பு ஒன்று பிடிபட்டதாகவும், தற்போது மீட்கப்பட்ட பாம்பு குட்டிகள் அன்று பிடிப்பட்ட நல்ல பாம்பின் குட்டிகளாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்திகிக்கன்றன.

இதையும் படிக்க : விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. மேட்டூர் அணையிலிருது 3000 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..

தற்போது மீதமுள்ள பாம்பு குட்டிகளை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பரபரப்பான பகுதியில் இவ்வளவு பெரிய அளவில் நல்ல பாம்புகள் மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமள்ள பாம்புகளையும் விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் அதுவரை எங்களால் நிம்மதியாக இந்த பகுதியில் நடமாட முடியாது என்றும் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். பிரபல கல்லூரி இருக்கும் பகுதி என்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us