AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவாரூரில் இருந்து மதுரையை மிரள வைத்த தாய்மாமன் சீர் வரிசை! கார், நகை, ரூ. 60 லட்சம் ரொக்கம்..

மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் வரிசை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தாய்மாமன் சீர் வழங்குவதில் மதுரையை மிஞ்சும் வகையில் திருவாரூரைச் சேர்ந்த தாய்மாமன் பிரமாண்டமாக சீர் வழங்கியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருவாரூரில் இருந்து மதுரையை மிரள வைத்த தாய்மாமன் சீர் வரிசை! கார், நகை, ரூ. 60 லட்சம் ரொக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Sep 2026 12:08 PM IST

செப்டம்பர் 1, 2026: மதுரையில் நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், திருவாரூரைச் சேர்ந்த தாய்மாமன் சார்பில் வழங்கப்பட்ட பிரமாண்டமான சீர் வரிசை பொருட்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில் தாய்மாமன் சீர் வரிசை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனது சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா, திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் தாய்மாமன் தனது அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் சீர் பொருட்களை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

காதணி விழாவிற்கு வந்த தாய்மாமன் சீர்:

அந்த வகையில், கடந்த 28ஆம் தேதி மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள விஜய் கிருஷ்ணா தனியார் திருமண மண்டபத்தில் சிறுமி தன்விகாவின் காதணி விழா நடைபெற்றது.

திருவாரூரைச் சேர்ந்த ராமு – ஆசைமணி தம்பதியின் மகள் வழிப் பேத்தியான தன்விகா, தஞ்சாவூரைச் சேர்ந்த கதிரவன் – சரணியா தம்பதியின் மகள் ஆவார். இவரது காதணி விழாவையொட்டி, தன்விகாவின் தாய்மாமன் கோகுல் சார்பில் பிரமாண்டமான சீர் வரிசை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. மேட்டூர் அணையிலிருது 3000 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..

இதில், சுமார் ரூ.33 லட்சம் மதிப்பிலான மகேந்திரா கார், 50 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 500 வகையான சீர் தட்டுகள், 50 கட்டுகள் கரும்பு, 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

நகை முதல் ரூ. 60 லட்சம் ரொக்கம் வரை:

மேலும், கண்ணாடிப் பேழையில் ரூ.500 நோட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் ரொக்கப் பணமும் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாறு ஏராளமான பொருட்களுடன் நடைபெற்ற தாய்மாமன் சீர் வரிசையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் வரிசை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தாய்மாமன் சீர் வழங்குவதில் மதுரையை மிஞ்சும் வகையில் திருவாரூரைச் சேர்ந்த தாய்மாமன் பிரமாண்டமாக சீர் வழங்கியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us