AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா?.. இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் பின்பற்றுங்கள்!

Public Provident Fund Scheme | பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் சிறந்த லாபத்தை பெற நீங்கள் ஒரு விஷயத்தை கட்டாயம் செய்ய வேண்டும். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2026 15:16 PM IST
பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் பாதுகாப்பான மற்றும் சிறந்த லாபம் வழங்ககூடிய திட்டங்களில் ஒன்றாக உள்ளது. 

1 / 5
இந்த திட்டத்தில் முதலீட்டாளர் தங்களுக்கு ஏற்றார் போல் மாதம் மாதம் பணத்தை டெபாசிட் செய்யவும், வருடத்திற்கு ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, எந்த தேதியில் பணத்தை டெபாசிட் செய்கிறோமோ அதற்கு ஏற்ப தான் இதில் லாபம் கிடைக்கும்.

2 / 5
அதாவது ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தின் 5 ஆம் தேதி தொடங்கி கடைசி தேதி வரை கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச இருப்பினை அடிப்படையாக கொண்டு தான் வட்டி வரவு வைக்கப்படும். உதாரணமாக செப்டம்பர் 01 ஆம் தேதி உங்கள் கணக்கில் ரூ.50,000 இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 

3 / 5
இப்போது நீங்கள் செப்டம்பர் 04 ஆம் தேதி கூடுதலாக ரூ.20,000 டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதன் மூலம் செப்டம்பர் 05 ஆம் தேதி உங்களது கணக்கில் ரூ.70,000 இருக்கும். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யவில்லை, பணத்தை எடுக்கவும் இல்லை என்றால் உங்களது குறைந்தபட்ச இருப்பு ரூ.70,000 ஆகவே இருக்கும்.

4 / 5
அப்போது மொத்த தொகைக்கும் உங்களுக்கு வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். இதுவே, நீங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி ரூ.10,000 டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களது மொத்த இருப்பு ரூ.60,000 ஆக இருக்கும். ஆனால், வட்டி அந்த ரூ.50,000-க்கு மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் செப்டம்பர் 05-க்குள் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us