Tamil Nadu Weather forecast: அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather : தமிழ்நாட்டில் செப்டம்பர் 1, 2026 இன்றும், செப்டம்பர் 2, 2026 நாளையும் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 1 : தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 1, 2026 இன்றும், செப்டம்பர் 2, 2026 நாளையும் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
16 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தொடரும் மழை
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1, 2026 இன்றும் செப்டம்பர் 2, 2026 நாளையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!




அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 03, 2026 வியாழக்கிழமை திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
சென்னை உள்பட புறநகர்ப் பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெய்யில் வாட்டி வதைக்கின்றது. இதனால் வெளியே செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் அதிகப்படியான வெய்யிலும், மாலை 3 முதல் மணிக்கெல்லாம் வானம் சட்டென்று மாறி மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருவாரூரில் இருந்து மதுரையை மிரள வைத்த தாய்மாமன் சீர் வரிசை! கார், நகை, ரூ. 60 லட்சம் ரொக்கம்..
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் செப்டம்பர் 1, 2026 இன்று முதல் செப்டம்பர் 3, 2026 3 நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் இது சில நேரங்களில் 6 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக மேல் சொல்லப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.