AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலீடு செய்யும் பிளானா?.. அப்போ இந்த அடிப்படை விதிகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Fundamental Rules For Investment | பொருளாதாரத்தை உயர்த்த, பாதுகாப்பானதாக மாற்ற முதலீடு செய்ய வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், முறையாக எப்படி முதலீடு செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில், முதலீடு செய்ய தேவையான அடிப்படை விதிகளை தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.

முதலீடு செய்யும் பிளானா?.. அப்போ இந்த அடிப்படை விதிகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Sep 2026 13:21 PM IST

சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்தால் மட்டுமே, பணத்தை பல மடங்கு உயர்த்தி, பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். அதற்காக பணத்தை ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டும் போதுமானாதாக இருக்காது. உங்களது தேவைகளுக்கு ஏற்ப, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது, சிறந்த பலன்களை பெற உதவியாக இருக்கும். இந்த நிலையில், சிறந்த முறையில் முதலீடு செய்து அதிக பலன்களை பெற உதவும் சில முக்கிய விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலீடு செய்ய விதி 100

இந்த விதி 100 என்ன கூறுகிறது என்றால், உங்களது வயதுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறது. அதாவது, உங்களது வயதை 100-ல் இருந்து கழித்து அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறது. உதாரணமாக உங்களுக்கு வயது 35 என்றால் நீங்கள் 65 சதவீதத்தை ஈக்விட்டி முதலீடுகளிலும், மீதமுள்ள 35 சதவீதத்தை பாண்டுகள் அல்லது சொத்துக்களில் முதலீடு செய்யலாம் என கூறுகிறது.

இதையும் படிங்க : நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. தீபாவளி பரிசாக வருகிறது இபிஎஃப்ஓ 3.0!

பணத்தை இரண்டு மடங்காக மாற்ற விதி 72

இந்த விதி 72 எதனை கூறுகிறது என்றால், நீங்கள் முதலீடு செய்யும் பணம் எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்பதை தெளிவுப்படுத்தும் விதியாக உள்ளது. அதாவது 72-ஐ நீங்கள் முதலீடு செய்ய உள்ள திட்டத்தின் வட்டி விகிதத்தோடு வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, உதாரணமாக உங்களுக்கு 9 என விடை கிடைத்தால் 9 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை இரண்டு மடங்காக உயரும்.

இதையும் படிங்க : Gold Loan : ஓரங்கட்டப்படும் தனிநபர் கடன்.. அதிகரிக்கும் தங்கக் நகை கடன்.. காரணம் என்ன?

50/30/20 விதி

இந்த 50/30/20 விதி உங்களது மாத ஊதியத்திற்கு எளிய வடிவத்தை கொடுக்கும். அதாவது, உங்களது மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்தை உங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு, தங்குமிடம் அனைத்தும் இதில் அடங்கும். அடுத்தபடியாக 30 சதவீத பணத்தை பொழுதுபோக்கு உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். மீதமுள்ள 20 சதவீத பணத்தை கடனை திருப்பி செலுத்துவது, சேமிப்பு ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

Follow Us