Fake Loan Scam.. பாதுகாப்பாக இருப்பது எப்படி.. இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!
Beware Of Fake Loan Scam | நிதி தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பலரும் இன்ஸ்டண்ட் கடன்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அவ்வாறு இன்ஸ்டண்ட் கடன்களை பெறும்போது மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே, இத்தகைய கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என பார்க்கலாம்.
மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். சில சமயங்களில் நிதி நெருக்கடி ஏற்படும்போது பலரும் வங்கி கடனை நாடுகின்றனர். வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் தான் பலரும் இன்ஸ்டண்ட் கடன்களை (Instant Loan) தேர்வு செய்கின்றனர். ஆனால், இந்த இன்ஸ்டண்ட் கடன்களுக்கு பின்னால் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இந்த இன்ஸ்டண்ட் கடன்களின் பெயரில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, இத்தகைய இன்ஸ்டண்ட் கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மோசடி இன்ஸ்டண்ட் கடன்கள் – பாதுகப்பாக இருப்பது எப்படி?
சில தகவல்களை உறுதி செய்வதன் மூலம், மோசடி இன்ஸ்டண்ட் கடன்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
தொடர்பு தகவல்களை உறுதி செய்யுங்கள்
நம்பகத்தன்மை கொண்ட நிதி நிறுவனங்கள், தங்களது உண்மையான தொடர்பு தகவல்களை கொடுப்பர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் தொடர்ப்புக்கொள்ள மொபைல் எண், ஜிமெயில் அடி, அலுவலகத்தின் முகவரி ஆகியவற்றை கொடுத்திருக்கும். ஆனால், இந்த தகவல்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் அந்த நிறுவனத்தை நம்பி கடனை பெறுவது ஆபத்தில் முடிந்துவிடும். எனவே, அது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.




இதையும் படிங்க : டிசம்பரில் தங்கம் விலை எப்படி இருக்கும்.. Emkay Wealth வெளியிட்ட ஷாக் கணிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி
எந்த ஒரு நிதி நிறுவனம் கடன் வழங்குகிறதோ அந்த நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இதனை உறுதி செய்ய நீங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று சோதனை செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் கடன் பெறும் நிறுவனம், ஆர்பிஐ-ன் இணையதளத்தில் இல்லை என்றால் அந்த நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுங்கள்.
இதையும் படிங்க : கடன் சிக்கலில் இருந்து வெளியே வர முடியவில்லையா?.. இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூகளை சோதனை செய்யுங்கள்
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னதாக எப்படி அதற்கான ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூகளை சோதனை செய்வோமோ, அதேபோல நீங்கள் கடன் பெற நினைக்கும் நிறுவனத்தின் ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூகளை சோதனை செய்ய வேண்டும் என்பதும் மிகவும் அவசியமாக உள்ளது.