AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முகவரி சான்று இல்லாமலே ஆதாரில் முகவரியை மாற்றலாம்.. இந்த ஆவணங்கள் போதுமானது!

Change Aadhaar Address Without Residence Certificate | ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய இருப்பிட சான்றிதழ் அவசியம் இல்லை. மாறாக இந்த சில ஆவணங்களை பயன்படுத்தி, ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம். அவை என்ன என்ன ஆவணங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

முகவரி சான்று இல்லாமலே ஆதாரில் முகவரியை மாற்றலாம்.. இந்த ஆவணங்கள் போதுமானது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Sep 2026 16:34 PM IST

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவனையில் சிகிச்சை பெறுவது வரை என பல இடங்களில் ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்படுகிறது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், அதில் இருக்கும் விவரங்கள் மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாக உள்ளது. ஒருவேளை தகவல்கள் தவறாக இருந்தாலும் அவற்றை திருத்தம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது.

இந்த நிலையில், ஆதார் முகமை பட்டியலில் இருக்கும் முகவரி சான்று ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முகவரி சான்று இல்லாமலே ஆதாரில் முகவரி மாற்றலாம்

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்காக முகவரிச் சான்றாக பல்வேறு வகையான ஆவணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது.

ஆதார் முகவரி மாற்றம் செய்ய இந்த ஆவணங்கள் போதும்

ஆதாரில் முகவரியை மாற்றம் செய்ய முகவரி கொண்ட சில ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும்.

  1. கடவுச்சீட்டு (Passport)
  2. பான் கார்டு (PAN Card)
  3. வங்கி கணக்கு புத்தகம்
  4. குடும்ப அட்டை
  5. வாக்காளர் அடையாள அட்டை
  6. மாற்றுத்திறனாளி அட்டை
  7. ஊரக வேலை அட்டை
  8. மின்சார கட்டண ரசீது (கடைசி மூன்று மாதங்களில் ஏதேனும் ஒன்று, அதற்கும் மேல் பழையதாக இருக்க கூடாது).
  9. தொலைபேசி, லேண்ட்லைன் கட்டண ரசீது (இதுவும் மூன்று மாதங்களுக்கு மேல் பழையதாக இருக்க கூடாது).
  10. தண்ணீர் கட்டண ரசீது ( மூன்று மாதங்களுக்கு மேல் பழையதாக இருக்க கூடாது).
  11. கேஸ் சிலிண்டர் ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழையதாக இருக்க கூடாது).
  12. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகள்).
  13. சொத்து வரி ரசீது (ஒரு ஆண்டுக்கு மேல் பழமையானதாக இருக்க கூடாது).
  14. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்.
  15. பதிவு செய்யப்படாத வாடகை அல்லது குத்தகை பத்திரம்.

இதையும் படிங்க : யூடியூபில் பார்த்த ரெசிபி மூலம் தொடங்கிய தொழில்.. இன்று மாதம் ரூ.25 லட்சம் வருமானம்.. அசத்தும் போபால் இளைஞர்!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆதார் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us