யூடியூபில் பார்த்த ரெசிபி மூலம் தொடங்கிய தொழில்.. இன்று மாதம் ரூ.25 லட்சம் வருமானம்.. அசத்தும் போபால் இளைஞர்!
Young Man Earns 25 Lakh Rupees Per Month | போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூபில் தான் பார்த்த சாண்ட்வெச் ரெசிபி மூலம் கடையை தொடங்கி, அதில் இருந்து மாதம் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் கணவு, சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். ஆனால், சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு தேவைப்படுன், தொழில் நினைத்தபடி வரவில்லை என்றால் நஷ்டத்தை சந்திக்கெ நேரிடும் என்பது உள்ளிட்ட காரணங்களால் பலரும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை வெறும் கணவாக வைத்திருப்பர். ஆனால், சிலர் துணிந்து சொந்த தொழில் தொடங்கி, அதில் சாதனையும் படைத்துள்ளனர்.
அந்த வகையில், யூடியூபில் ரெசிபி பார்த்து தொடங்கிய தொழில் மூலம் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் யார், என்ன தொழில் செய்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யூடியூப் வீடியோ மூலம் சொந்தமாக தொழில் தொடங்கிய நபர்
அபிஷேக் சாஹூ என்ற நபர் சொந்தமாக ஒரு சாண்ட்விச் கடையை நடத்தி வருகிறார். அவர் இந்த தொழிலை தொடங்க அடித்தலமாக இருந்தது ஒரு யூடியூப் வீடியோ தான். போபாலை சேர்ந்த இவர், முதலில் ஒரு கடையை நடத்தி வந்துள்ளார். ஆனால், தொடங்கிய ஒரு ஆண்டுக்குள்ளாகவே அந்த கடையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மனம் உடைந்து முயற்சியை கடைவிடாத அவர், இரண்டாவதாக தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்.




இதையும் படிங்க : கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
சாண்ட்விச் ரெசிபியால் உருவான சாம்ராஜ்யம்
அபிஷேக், ஒரு நாள் யூடியூபில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று வீடியோ பார்த்துள்ளார். அவருக்கு அதுவரை சமையலில் பெரிய அனுபவம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. எனவே தான், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவையான சாண்ட்விச்களை தயாரிப்பது எப்படி என யூடியூபில் வீடியோ பார்த்துள்ளார். இவ்வாறு பல வீடியோக்களை பார்த்து தனது சொந்த முயற்ச்சியில் ஒரு சாண்ட்விச் தயாரித்துள்ளார்.
இதையும் படிங்க : இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அமலுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
அந்த சாண்ட்விச்சிற்கு தனது நண்பர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் உடனடியாக ஒரு தள்ளு வண்டி கடையில் அந்த சாண்விட்சை விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். வெறும் ரூ.30,000-த்தை வைத்து அந்த தொழிலை தொடங்கியுள்ளார். ஆனால், நாளடைவில் சாண்விட்சின் தரம், சுவை என அனைத்தும் சிறப்பாக இருந்த நிலையில் அவரது தொழில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
அவ்வாறு சிறிய முயற்சியில் ஆரம்பித்த அந்த தொழிலின் மூலம் அவர் தற்போது மாதம் ரூ.25 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.