வீட்டு கடனை திருப்பி செலுத்திய பிறகு இந்த ஆவணங்களை வாங்க மறக்காதீர்கள்.. என்ன என்ன தெரியுமா?
Important Documents To Get From Bank After Repaying Home Loan | சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்ற ஆசையில் பலரும் வங்கி கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வங்கி கடன் வாங்கும் நபர்கள், கடனை திருப்பி செலுத்திய பிறகு இந்த ஆவணங்களை கட்டாயம் வாங்க வேண்டும்.
இந்திய குடிமக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய ஆசை தான் சொந்த வீடு. கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என பலரும் நினைப்பர். அவ்வாறு கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு தான் வங்கிகள் கடன் வழங்குகின்றன. வங்கி கடனை பெற்று சொந்த வீடு கனவை நனவாக்குவது இந்தியர்கள் மத்தியில் மிக பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், வீட்டு கடனை அடைத்து முடித்த உடன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது வீட்டு கடனை கட்டி முடித்த உடன் ஒரு சான்றிதழை வாங்க வேண்டும். அது என்ன சான்றிதழ், அந்த சான்றிதழை வாங்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரிஜினல் பத்திரத்தை வாங்க வேண்டும்
வங்கியில் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்றால் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் ஒரிஜினல் ஆவணங்களை வழங்கியிருப்பீர்கள். அந்த ஆவணங்களை திருப்பி வாங்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. உதாரணமாக சொத்து பத்திரம், அலாட்மெண்ட் கடிதம், கட்டிட வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தவறாமல் வங்கிகளிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : வங்கி கடனை அடைக்க பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
அனைத்தும் சரியாக உள்ளதா? – உறுதி செய்துக்கொள்ளுங்கள்
வங்கிகளிடம் ஒப்படைத்த ஆவணங்களை வாங்கிய பிறகு, அந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா, அதில் இருக்கும் பக்கங்கள் எதுவும் காணாமல் போயுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். கடன் வழங்கியோ வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ நீங்கள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்திவிட்டீர்கள் என்றால், அடுத்த 30 நாட்களுக்குள்ளாக இந்த ஆவணங்களை உங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும்
இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்க வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ தாமதப்படுத்தினால், 30 நாட்களுக்கு பிறகு தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் ரூ.5,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : முதலீட்டை 2 மடங்காக மாற்றும் திட்டங்கள்.. எப்போது முழு பலன் கிடைக்கும்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஹோம் லோன் க்ளோசர் கடிதம்
வீட்டு கடனை நீங்கள் செலுத்தி முடித்த பிறகு வங்கிகள் உங்களுக்கு ஹோம் லோம் க்ளோசர் கடிதத்தை வழங்க வேண்டும். இது வாடிக்கையாளர் தனது கடனை முழுவதுமாக திருப்பி செலுத்திவிட்டார் என்பதை உறுதி செய்யும் கடிதமாகும்.
நோ டியூ சான்றிதழ்
வங்கி கடனை முழுவதுமாக அடைத்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவது தான் இந்த நோ டியூ சான்றிதழ். அதாவது, கடன் வழங்கிய வங்கிக்கும் வாடிக்கையாளரின் சொத்துக்கும் எந்த வித தொடர்பு இல்லை என்பதுதான் இதற்கு அர்த்தம் ஆகும்.