AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிதி பாதுகாப்பு பெற , 20 வயதில் இவற்றை செய்யுங்கள்.. என்ன என்ன தெரியுமா?

Tips For Financial Security | மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் தனது 20களில் பின்பற்றும் பழக்க வழக்கங்கள், அவர்கள் தங்களது எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை பெற மிகவும் உதவியாக இருக்கும்.

நிதி பாதுகாப்பு பெற , 20 வயதில் இவற்றை செய்யுங்கள்.. என்ன என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Aug 2026 00:25 AM IST

மனிதர்களாக பிறந்த அனைவரும் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சவால்களை சமாளிக்க முடியாமல் தேவையற்ற கடன்களை வாங்கி, நிதி சுமையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து உள்ளது. எனவே தான் அனைவரும் தங்களது நிதி பாதுகாப்புக்காக உழைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், 20 வயதில் ஒருவர் செய்யும் சில நிதி சார்ந்த நடவடிக்கைகள், அவரை எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பு உடையவராக இருக்க எவ்வாறு உதவி செய்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிதி பாதுகாப்பை பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

நீங்கள் உங்கள் 20 வயதில் இருக்கிறீர்கள் என்றால் உங்களது நிதி பாதுகாப்புக்காக இந்த விஷயங்களை கட்டாயம் செய்யுங்கள்.

அவசர கால சேமிப்பு

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிதி தேவை ஏற்படும். அதனை சமாளிக்க பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்பாராத நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களது 3 முதல் 6 மாத செலவை அவசர நிதியாக சேமித்து வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!

சேமிக்க ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்

உங்களுக்கு சம்பளம் வரும் தேதியை பொருத்து ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை செட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் தானாகவே உங்களது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி சேமிப்புக்கு சென்றுவிடும். இதன் மூலம் நீங்கள் சேமிக்க தவறினாலும், ஆட்டோமேட்டிக்காக உங்களது சேமிப்பில் பணம் ஏறிக்கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க : Gold Price : செப்டம்பர் மாதம் தங்கம் விலை எப்படி இருக்கும்?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

செலவுகளை கண்காணிக்க வேண்டும்

பணம் வருவதை போலவே அதனை எப்படி செலவு செய்கிறோம், முறையான வழியில் தான் பணம் செலவாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. காரணம், பலரும் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக தங்களது பணத்தை செலவு செய்கின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் செலவு செய்கிறோம், எதற்காக பணம் செலவு செய்கிறோம் என்பதை தெரிந்துக்கொண்டு தேவையற்ற செலவுகளை குறைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Follow Us