Neeraj Chopra: சக்கர நாற்காலில் வந்த நீரஜ் சோப்ரா.. காயத்தால் அவதி! சோகத்தில் ரசிகர்கள்!
Neeraj Chopra on Wheelchair: நீரஜ் சோப்ரா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தையும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 2023ம் ஆண்டு புராபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்தால் அவர் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். தற்போது நீரஜ் சோப்ராவின் காயம் தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, பிரஸ்ஸல்ஸ் டைமண்ட் லீக் (Diamond League) இறுதிப் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) தயாராகி வந்தார். ஆனால் தற்போது அவர் அந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது நீரஜுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவரால் தானாக நடக்க முடியவில்லை என்பது, அவரது காயத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.
ALSO READ: காலில் கிழிந்த தசைநார்கள்.. ஆசிய விளையாட்டு போட்டியில் விலகிய நீரஜ் சோப்ரா!
சக்கர நாற்காலில் வந்த நீரஜ் சோப்ரா:
Heartbreaking to see Neeraj Chopra like this 😢
Wishing him a strong and speedy recovery! https://t.co/S4H8Y5AONY pic.twitter.com/4NCD68NYaP
— The Khel India (@TheKhelIndia) August 30, 2026
விமான நிலையத்தில் நீரஜ் சோப்ரா சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியபடியும், ஊன்றுகோலைப் பிடித்தபடியும் வந்தார். தனது காயம் தொடர்பாக குறிப்பிட்ட நீரஜ் சோப்ரா கூறியதாவது, “மிகுந்த கடின உழைப்பிற்குப் பிறகு, நான் விரும்பிய ரிதத்தை இறுதியாகக் கண்டடைவதாக உணர்ந்தேன். மேலும் லோசானில் இந்த சீசனின் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். துரதிர்ஷ்டவசமாக, அதன் பிறகு சிறிது காலத்திலேயே பயிற்சியின் போது எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனது மருத்துவர் மற்றும் அணியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தப் பருவத்தில் என்னால் விளையாட முடியாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது ஏமாற்றமளிக்கிறது, குறிப்பாக நான் எனது ரிதத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாக நினைத்திருந்தேன். ஆனால், சொல்வது போல், ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். இப்போது எனது கவனம், முழு உடற்தகுதியைப் பெற்று முன்பை விட வலிமையாகத் திரும்புவதில்தான் உள்ளது.” என்றார். இந்த சீசனில் இருந்து நீரஜ் விலகுவதால், அவர் தகுதி பெற்றிருந்த டைமண்ட் லீக் இறுதிப் போட்டிகளையும் தவறவிடுவார்.
ALSO READ: டைமண்ட் லீக் பைனலுக்கு நீரஜ் சோப்ரா தகுதி.. இறுதிப்போட்டி எப்போது? எங்கே?
நீரஜ் சோப்ரா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தையும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 2023ம் ஆண்டு புராபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய தடகள வீரர் இவரே ஆவார்.