ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல்?.. புதிய விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!
India Driving Licence New Rules | இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையான விதிதான் ஓட்டுநர் உரிமம் (Driving Licence). காரணம், இந்திய சாலைகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதன் காரணமாக தான், 18 வயது நிறைவடைந்ததும் பலர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். இந்த நிலையில் தான், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு (Central Government Of India) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான் பாஸ்?
தற்போதைய நிலவரப்படி Learner’s Licence பெறுவதற்கான ஆன்லைன் ஓட்டுநர் பயிற்சி தேர்வி தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவதே போதுமானதாக உள்ளது. ஆனால், இந்த புதிய விதிகளின்படி, இந்த குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60-ல் இருந்து 75 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமானதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.40,000 கார்ப்பரேட் வேலை விட்டுவிட்டு ரேப்பிடோ ஓட்டும் நபர்.. மாதம் ரூ.1.2 லட்சம் சம்பாதிக்கிறார்!




கட்டணங்கள் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன
ஆதார் அட்டை மூலம் இணைய வாயிலாக மேற்கொள்ளும் சில குறிப்பிட்ட ஓட்டுநர் உரிம சேவைகளுக்கு கட்டணங்களை முழுமையாக நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை மாற்றம் செய்வதற்கான கட்டணங்கள் குறைக்கப்படலாம் அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்.. இனி 9 அல்ல, 4 போதும்.. என்ன தெரியுமா?
15 நாட்களுக்குள் முடிவை எடுக்க வேண்டும்
ஓட்டுநர் உரிமத்தில் பெயர் அல்லது மற்ற பிற விவரங்களை மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 15 நாட்களுக்குள்ளாக அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.