AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.40,000 கார்ப்பரேட் வேலை விட்டுவிட்டு ரேப்பிடோ ஓட்டும் நபர்.. மாதம் ரூ.1.2 லட்சம் சம்பாதிக்கிறார்!

Engineer Quits 40000 Rupees Job for Rapido | ஜார்கண்டில் இளைஞர் ஒருவர் தனது 40,000 மாத வருமானம் கொண்ட கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ரேப்பிடோ ஓட்டுகிறார். அதன் மூலம் அவர் மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.2 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

ரூ.40,000 கார்ப்பரேட் வேலை விட்டுவிட்டு ரேப்பிடோ ஓட்டும் நபர்.. மாதம் ரூ.1.2 லட்சம் சம்பாதிக்கிறார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Oct 2026 23:30 PM IST

முன்பெல்லாம் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து பட்ட படிப்பை முடித்துவிட்டு, கைநிறைய சம்பளம் வாங்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் போதும் என்பதுதான் பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அதேபோல, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்தும் வந்தனர். ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மிக குறைந்த அளவிலே ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தாங்கள் செய்துக்கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட்டு, ஏதேனும் தொழில் தொடங்கி சாதனை செய்கின்றனர்.

அந்த வகையில், மாதம் ரூ.40,000 சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான பாதையை தேர்வு செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். இந்த நிலையில், அவர் யார், அப்படி என்ன வேலை செய்து லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேப்பிடோ ஓட்டி மாதம் ரூ.1.2 லட்சம் வருமான ஈட்டும் நபர்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரேபிடோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தற்செயலாக அந்த ரேபிடோ ஓட்டுநரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போதுதான், இன்ஜினியரான அவர் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ரேப்பிடோ ஓட்டுவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் அவருடன் பேசிய தனது அனுபவத்தை அந்த பெண் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : தீபாவளி நெருக்கத்தில் குட் நியூஸ் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.800 சரிவு

ஒரு நாளில் ரூ.4,000 வரை சம்பாதிக்கும் இளைஞர்

அந்த பெண் அவரிடம் ஒரு நாளில் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒரு நாளில் சுமார் ரூ.4,000 வரை வருமானம் ஈட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் அந்த பதிலை கேட்ட இளம் பெண் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்ந்துள்ளார். அப்போது அந்த பெண் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ஆமாம் மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை வருமானம் வரும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ராயல் என்ஃபீல்டின் நிறம் மாறும் பைக்.. 125 பேர் மட்டுமே வாங்க முடியும்? ஏன் இந்த ஸ்பெஷல்?

அப்போதுதான் அவர், தான் ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.40,000-க்கு வேலை செய்து வந்ததாகவும், அந்த வருமானம் போதவில்லை என்பதால் ரேப்பிடோ ஓட்ட வந்ததாகவும் கூறியுள்ளார். இதில் தனக்கு நல்ல வருமானம் கிடைப்பதோடு, சொந்த ஊரிலே வேலை செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow Us