யுபிஐ-ல் அதிக பணம் வந்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?.. இந்த விதிகளை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Income Tax on UPI Payments | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் அதிக அளவு பணம் பெற்றால் அது குறித்து கேள்வி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை தான் பரவலாக உள்ளது. சிறிய கடைகளில் சிறிய அளவிலான தொகை முதல் பெரிய கடைகளில் பெரிய அளவிலான தொகைகள் வரை என பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். என்னதான், யுபிஐ மிக எளிதாக பண பரிவர்த்தனை செய்ய உதவியாக இருந்தாலும், அதில் சில விஷயங்கள் குறித்து கவனம் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், யுபிஐ மூலம் ஒருவரின் வங்கி கணக்குக்கு அதிக பணம் வந்தால் அது குறித்து வருமான வரித்துறை (Income Tax Of India) நோட்டீஸ் அனுப்புமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் அதிக பணம் வந்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?
யுபிஐ மூலம் அதிக அளவிலான தொகை உங்களுக்கு வந்தால் அது தொடர்பாக உங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் வராது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.20 லட்சம் என்று கணக்கு காட்டுகிறார், ஆனால் அவரது கணக்கில் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்படுகிறது என்றால் அது சிக்கல் ஆகும். இந்த பணம் நண்பர்கள், உறவினர்கள் என யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம். ஆனால், அது குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நீங்கள் உரிய விளக்கத்தை அளிக்கும்போது எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால், ஒருவேளை நீங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை அளிக்க தவறும் பட்சத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க : உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்.. இனி 9 அல்ல, 4 போதும்.. என்ன தெரியுமா?




யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எந்த வரம்பும் இல்லை
ஒருவர் ஒரு நிதியாண்டில் இவ்வளவு தான் யுபிஐ பண பரிவர்த்தனை தான் எந்த அளவும் இல்லை. ஆனால், ஒருவர் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அளவு உள்ளது. இந்த நிலையில், அதற்கு மேல் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு உரிய ஆதாரம் மற்றும் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் எந்த வித சிக்கலும் ஏற்படாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் அதற்கு ஏற்ப வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.