Silver : மந்த நிலையில் வெள்ளி.. விலை குறைந்து முதலீடு செய்வதில் தயக்கம்.. காரணம் என்ன?
Silver Investment Reduced Gradually | ஈரான் போருக்கு முன்னதாக வெள்ளிக்கு அதிக டிமாண்ட் இருந்ததன் காரணமாக வெள்ளி விலை உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு வெள்ளி விலை படிப்படியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது வெள்ளி மிதான முதலீடும் குறைந்துள்ளது.
மாதிரி புகைப்படம்
- தங்கத்தின் அளவுக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக வெள்ளி திகழ்ந்து வந்த நிலையில், தற்போது வெள்ளியில் முதலீடு செய்வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வெள்ளி வர்த்தகர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- ஈரான் போருக்கு முன்னதாக, தங்கத்தை விடவும் வெள்ளியில் அதிக மக்கள் முதலீடு செய்தனர். இதன் காரணமாக ஒரு கிலோ வெள்ளி ரூ.4.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஈரான் போருக்கு பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து வந்த வெள்ளி, தற்போது ஒரு கிலோ வெறும் ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஈரான் போருக்கு முன்னதாக உலக அளவில் தொழில்துறையில் மற்றும் சீன சந்தையில் வெள்ளிக்கு ஏற்பட்ட அதிகப்படியான டிமாண்ட் காரணமாக வெள்ளி விலை சரசரவென உயர்வை சந்தித்தது. ஆனால், ஈரான் போருக்கு பிறகு நிலமை தலைகீழாக மாறி வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்தது.
- வெள்ளி விலை அதன் உச்ச விலையான ரூ.4.15 லட்சத்தில் இருந்து சுமார் 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ள போதிலும், வெள்ளியில் முதலீடு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இந்த தாக்கம் வெள்ளி பார்கள், மொத்த விற்பனை சந்தையில் மட்டும் இல்லாமல் வெள்ளி காசு, ஈடிஎஃப், பியூச்சர்ஸ் உள்ளிட்ட அனைத்து முதலீடுகளிலும் எதிரொலித்துள்ளது.
- ஒரு பக்கம் பொருளாதார மந்த நிலை, நுகர்வில் ஏற்பட்ட தொய்வு காரணமாக தொழிற்துறையில் வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. மற்றொரு பக்கம், வெள்ளியை பயன்படுத்தும் பிரதான துறையாக உள்ள சோலார் பேனல் உற்பத்தி துறையிலும் வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துள்ளது இதற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது.
Follow Us




