BKU: கேரளா பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்”.. அப்படி என்ன தெரியுமா?
Bethlehem Kudumba Unit Movie Box office: நடிகர் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியான படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படமானது வெளியாகி இன்றுடன் (04/09/2026) கிட்டத்தட்ட 15 நாட்களான நிலையில், கேரளா பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பிலும், இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish AD) இயக்கத்தில்; வெளியான புதிய திரைப்படம்தான் பெத்லகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). இந்த படமானது சிறப்பான பீல் குட் காதல் கதைக்களத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. நிவின் பாலி தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தயாரிக்கும் பென்ஸ் (Benz) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறாராம். 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம்தான் பெத்லகேம் குடும்ப யூனிட்.
இதில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் (04/09/2026) கிட்டத்தட்ட 15 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் இப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை செய்துள்ளது.




இதையும் படிங்க: சூர்யாவின் 48வது படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர் – வைரலாகும் வீடியோ!
கேரளா பாக்ஸ் ஆபிசில் சாதனை செய்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம்:
நடிகர் நிவின் மற்றும் மமிதாவின் காம்போவில் இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் மலையாளத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு பொன்பர மொழிகளில் இன்று (04/09/2026) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நிச்சயம் சிறப்பான வரவேற்பு பெரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்
மலையாளத்தில் வெளியாகிய பெத்லகேம் குடும்ப யூனிட் கிட்டத்தட்ட 15 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் கிட்டத்தட்ட ரூ 100 கோடியை வசூல் செய்துள்ளதாம். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து வைரலாகும் பதிவு:
Official 💥 #NivinPauly‘s #BethlehemKudumbaUnit Fastest 100cr From Kerala Boxoffice🔥 pic.twitter.com/e4Xx0rp0K7
— Balaji (@RDBalaji) September 4, 2026
நிவின் பாலி பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை அடுத்ததாக, மலையாளத்தில் வெளியாகின ஹிட்டான ஜய ஜய ஜய ஹே பட இயக்குனரின் இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், தனது 50வது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.