AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் 48வது படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர் – வைரலாகும் வீடியோ!

Suriya48 Movie: ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், இயக்குநர் டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் சூர்யா48. இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இரண்டாவதுக்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக வீடியோ வைரல்.

சூர்யாவின் 48வது படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர் – வைரலாகும் வீடியோ!
சூர்யாவின் 48வது படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2026 11:35 AM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நயாகனாக இருந்துவருபவர் நடிகர் சூர்யா (Suriya). தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில், சூர்யா புதிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் இந்த 2026ம் ஆண்டில் மொத்தமாக 2 படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu) திரைப்படமும், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியையோ பெற்றிருந்தது. இப்படங்கள் கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படங்களை தொடர்ப்பித்து இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில், சூர்யா47 படத்திலும் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது.

இதன் பின், ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் (TJ Ganavel) இயக்கத்தில் சூர்யா தனது 48வது படத்தில் பணியாற்றிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதன் 2வது கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் 2027 பொங்கலுக்கு இல்லை.. ரிலீஸ் குறித்து சிலம்பரசன் கொடுத்த அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யா48 பட ஷூட்டிங் நிறைவு குறித்த வீடியோ:

சூர்யா 48வது திரைப்படத்தின் அப்டேட்:

இந்த சூர்யா 48 படமானது நிஜ கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துவருகிறார். இந்த படத்தில் சூர்யா 5 ரூபாய் டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதை காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்ப்லே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருகிறதாம்.

இதையும் படிங்க: இம்மார்ட்டல் பட புரொமோஷனில் பங்கேற்காத சர்ச்சை.. உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாம். மேலும் தற்போது மூன்றாவத்துக்காட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க காத்திருக்கிறதாம். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கயாடு லோஹர், சூர்யா48 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தது குறித்து பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை 2027ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தனது 49வது திரைப்படத்தில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் சூர்யா இணைவதாக கூறப்படுகிறது.

Follow Us