AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இறந்தவர்களின் அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

What To Do With A Identity Cards Of Demised Person | இந்திய குடிமக்களுக்கு சில அடையாள ஆவணங்கள் முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது அடையாள ஆவணங்களை என்ன செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இறந்தவர்களின் அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Sep 2026 12:04 PM IST

இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளிட்ட சில முக்கியமான அடையாள ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. அரசின் சேவைகளை பெற இந்த ஆவணங்கள் மிக அவசியமாக உள்ளது. அதாவது ஒருவர் இந்தியாவில் வாழ்வதற்கு இந்த அடையாள ஆவணங்கள் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும், மீண்டும் அரசிடமே ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒருவர் இறந்த பிறகு அவரது அடையாள ஆவணங்களை என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அந்த நபர் உயிரிழந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது ஆதார் கார்டை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. வழக்கமாக, ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவருக்கான இறப்பு சான்றிதழ் வாங்குவோம். அதுவே போதுமானது. அதாவது, இறப்பு சான்றிதழ் பெற்றாலே ஆதார் கார்டு தானாகவே செயலிழந்துவிடும்.

இதையும் படிங்க : “புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி!”.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!!

பான் கார்டு

இந்தியாவில் வசிக்கும் ஒருவர் வங்கியில் கணக்கு தொடங்கி நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில், ஒருவர் உயிரிழப்பதற்கு முன்னதாக வருமான வரி தாக்கல் செய்து, ரீஃபண்டுக்காக காத்திருந்தால், அந்த ரீஃபண்ட் வரும் வரை நீங்கள் கட்டாயம் அவரது பான் கார்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அனைத்து தேவைகளும் நிறைவடைந்த பிறகு பான் கார்டை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துவிடலாம். இது கட்டாயம் இல்லை, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படலாம்.

இதையும் படிங்க : Gold : லாக்கரில் வைத்த தங்கம் காணாமல் போனால் இழப்பீடு கிடைக்குமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இதுவே இறந்த நபர் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அது குறித்து கவலைப்பட தேவை இல்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதனை புதுப்பிக்க வேண்டும் என்பதால், அது தானாகவே செயலிழந்துவிடும். இதேபோல தான் வாக்காளர் அடையாள அட்டையும். அதாவது, உயிரிழந்தவர்களி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

Follow Us