காசை கரியாக்கும் “Impulsive Buying”.. அதிக செலவுகளை தவிர்க்க உதவும் 3 வழிகள்!
Impulsive Buying Make You Overspending | ஆன்லைனில் பொருட்களின் விளம்பரத்தை பார்த்துவிட்டு, அதனை உடனேயே வாங்கிவிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் Impulsive Buying தடுத்து, அதிக பணம் செலவாகாமல் பார்த்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நிலையில், அவர்களிடையே Impulsive Buying அதிகரித்துள்ளது. அதாவது, ஆன்லைனில் பொருட்களை பார்த்ததும், அவற்றின் மீது ஈர்ப்புக்கொண்டு உடனே அவற்றை வாங்கிவிடுவதற்கு தான் Impulsive Buying என்று பொருள். இந்த முறைப்படி பொருட்களை வாங்கும்போது அதிக பணம் செலவாகிறது. இதன் காரணமாக பொருளாதார சிக்கலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், இந்த இதனை தடுக்க உதவும் மூன்று முக்கிய யுக்திகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Impulsive Buying என்றால் என்ன?
தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கான விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் மூலமே மேற்கொள்கொளின்றனர்.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் ரூ.2,320, வெள்ளி ரூ.5,000 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன?




இன்ஸ்டாகிராமில் உள்ள அல்காரிதம் மூலம் அந்த அந்த வயதினருக்கு ஏற்ற விளம்பரங்கள் தோன்றும். அதனை பார்க்கும் பொதுமக்கள் உடனே அதனை வாங்கிவிடுவர். இவ்வாறு செய்யும்போது, ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் அந்த பொருளை பயன்படுத்த மாட்டர். இதன் காரணமாக வாங்கிய பொருள் வீணாவதோடு அதற்கான பணமும் வீணாக போய்விடும்.
அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள்
கையில் மாத சம்பளம் அல்லது பணம் வந்தவுடன் உடனடியாக ஏதேனும் பொருளை வாங்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முதலில் வாங்குங்கள். உங்களிடம் இரண்டு வங்கி கணக்குகள் இருந்தால், உங்களது அத்தியாவசிய தேவைகளை கணக்கில் கொண்டு பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றிவிடுங்கள். மீதமுள்ள தொகையை நீங்கள் திட்டமிடாத செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
டிஸ்கவுண்டை காரணமாகா வைத்து பொருள் வாங்காதீர்கள்
ஆன்லைன் ஷாப்பிங்கில் பொதுமக்கள் சுலபமாக விழுந்துவிடும் இடம் ஒன்று உள்ளது. அதுதான் டிஸ்கவுண்ட். இன்று ஒரு நாள் மட்டுமே சலுகை உள்ளது, இன்னும் 10 மணி நேரத்தில் சலுகை முடிவடைய உள்ளது என விளம்பரங்களை கண்டு பலரும் எதனையும் யோசிக்காமல் உடனே பொருட்களை வாங்கிவிடுகின்றனர். அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டு தேவை ஏற்பட்டால் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்.
இதையும் படிங்க : சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
பொருட்களை வாங்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் ஏதேனும் ஒருன்பொருளை வாங்க வேண்டும் என்றால் அதற்கு சில கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு Cooling Period என பெயர். ஒரு பொருளை உடனே வாங்குவதற்கும், சில நாட்கள காத்திருந்து வாங்குவதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த காத்திருப்பு காலத்தில், அந்த பொருள் உண்மையாகவே தேவையா என்ற புரிதல் ஏற்படும். எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.