Gold Price: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை.. வெள்ளி நிலவரம் என்ன?
செப்டம்பர் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,065-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 4, 2026: தங்கம் விலை செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,240-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த ஜூலை மாதம் முதலே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. நேற்று மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்த நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
இந்த நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,065-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: எஸ்ஐபி மற்றும் சுயதொழில் திட்டங்களுக்கு நோ.. ஜென் ஜி-யின் புதுமையான நிதி பழக்கம்..
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும்?
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
மேலும் படிக்க: காசை கரியாக்கும் “Impulsive Buying”.. அதிக செலவுகளை தவிர்க்க உதவும் 3 வழிகள்!
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக உயரக்கூடும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை பொதுமக்கள் பரிசீலிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.