AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Silambarasan: அரசன் 2027 பொங்கலுக்கு இல்லை.. ரிலீஸ் குறித்து சிலம்பரசன் கொடுத்த அப்டேட்!

Arasan Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தமிழ் உருவாகிவரும் பிரம்மாண்ட படம்தான் அரசன். இதில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்துவரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிலம்பரசன் அரசன் பட ரிலீஸ் குறித்து பேசியுள்ளார்.

Silambarasan: அரசன் 2027 பொங்கலுக்கு இல்லை.. ரிலீஸ் குறித்து சிலம்பரசன் கொடுத்த அப்டேட்!
சிலம்பரசன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2026 10:48 AM IST

தமிழில் ரசிகர்கள் கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநராக இருந்துவருபவர்தான் வெற்றிமாறன் (VetriMaaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியாகிவருகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விடுதலை 2 (Viduthalai 2). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியானது. இப்படம் இவருக்கு ஓரளவு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்திற்கு பின், வெற்றிமாறனின் இயக்கத்திலும், சிலம்பரசனின் (Silambarasan)  நடிப்பிலும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் அரசன் (Arasan). இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், இன்னும் நடைபெற்றுவருகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலம்பரசன் அரசன் திரைப்படத்தின் ரிலீஸ் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மோட்டோர் ஸ்போர்ட்ஸ் நகரம் – முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்

அரசன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து சிலம்பரசன் சொன்ன விஷயம்:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் சிலம்பரசன், “ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நான் வெற்றிமாறன் சாரிடம் கேட்டேன், படம் தாமதமாக வெளியாகும் என்றும், 2027ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகாது என்றும் சொன்னீர்கள். என் ரசிகர்களை இனிமேலும் காத்திருக்க வைக்க முடியாது என்பதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் பல நாட்களாகக் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்

படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, அரசன் எதைப் பற்றியது என்ற ஒரு சிறு புரோமோ நாங்கள் எடுத்தோம். எனவே, The World of Arasan வீடியோ ஒன்றை 2026ம் ஆண்டு தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இது அரசனின் ஒரு பிரத்யேக படைப்பாக இருக்கும், இதை நீங்கள் அனைவரும் பெரிய திரையில் காண்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

அரசன் பட ரிலீஸ் குறித்து சிலம்பரசன் பேசியதாக வைரலாகும் வீடியோ:

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இப்படமானது வட சென்னை பட டைம் லைனில் இருக்கும் கதைக்களத்தில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us