AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SIP முதலீடு.. மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. முழு விவரம் இதோ!

SIP Investment and Benefits | தற்போதைய காலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள முதலீடு தான் எஸ்ஐபி. இந்த நிலையில், எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடியை உருவாக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SIP முதலீடு.. மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Sep 2026 18:11 PM IST

சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்தால் தான் அதனை பல மடங்காக உயர்த்த முடியும். இதற்காக ஏராளமான திட்டங்கள் உள்ள நிலையில், சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan). இந்த திட்டத்தில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெறலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர், இந்த எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கோடிகளில் லாபம் பார்க்க முடியுமா, அதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் 10 முதல் 15 சதவீதம் வரை முதலீடு செய்ய வேண்டும்

நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது மாத வருமானத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை முதலீடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அப்படி, மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபரின் ஊதியத்தை வைத்து கணக்கு போட்டால் அவர் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில் தான் பலருக்கும் ஒரு கேள்வி வரும். மாதம் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை முதலீடு செய்தால் தங்களால் கோடீஸ்வரர் ஆக முடியுமா என்பதுதான். இந்த கேள்விக்கு பதில் ஆமாம் என்பதுதான். காம்பவுண்டிங் மேஜிக் மூலம் இது சாத்தியமாகும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் – கணக்குதாரர் இறந்தால் யாருக்கு பணம் கிடைக்கும்?

நீண்ட கால முதலீடு எனும் மந்திரம்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும்போது சராசரியாக 12 முதல் 15 சதவீதம் வரை ஆண்டுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் தொடர்ந்து 24 ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் என்ன நடக்கும். அதாவது, அந்த 24 ஆண்டுகள் அந்த நபர் மாதந்தோறும் தவறாமல் ரூ.7,500 முதலீடு செய்தால் ரூ.1 கோடி என்ற இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்.

இதையும் படிங்க : உங்கள் சம்பளம் உங்கள் சிபில் ஸ்கோரைத் தீர்மானிக்குமா? உண்மை என்ன?

மாதம் ரூ.7,500 என 24 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதலீடு செய்யும் தொகை வெறும் ரூ.21.6 லட்சம் தான். ஆனால், காம்பவுண்டிங் வட்டி மூலம் அது ரூ.1 கோடியாக மாறும்.

Follow Us