மம்முட்டியின் பிறந்த நாள் ஸ்பெஷல்… நாளை ஓம் படத்திலிருந்து வெளியாகும் சிறப்பு வீடியோ
OM Movie Special Video Update | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் படம் ஓம். இந்தப் படத்தில் இருந்து நாளை ஒரு சிறப்பு வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகர் மம்முட்டி அவ்வபோது தமிழ் மொழியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் மம்முட்டி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பேரன்பு. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளியாகி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் நடிகர் மம்முட்டி. மலையாள சினிமாவில் வடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களிலாவது இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் நடிகர் மம்முட்டி. அதன்படி தமிழ் மொழியில் இவர் தற்போது நடித்து வரும் படம் ஓம். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வரும் நிலையில் மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




நாளை ஓம் படத்திலிருந்து வெளியாகும் சிறப்பு வீடியோ:
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் ஓம் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இருந்து நாளை நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை 07-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு காலை 11 மணிக்கு அந்த வீடியோ வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல்… ஓம் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A special entry for a special birthday 🔥#OM – Siya arrives tomorrow at 11AM.
A @SaiAbhyankkar Musical. @dhanushkraja @mammukka @Rajkumar_KP @RTakeStudios @wunderbarfilms @Sai_Pallavi92 #NaseeruddinShah @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams… pic.twitter.com/KXLcnNQsK9
— Wunderbar Films (@wunderbarfilms) September 6, 2026
Also Read… கலகலப்பாக இருக்கும் அன்பே டயானா படம்… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!