AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ENG vs SL: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம்.. கில் சாதனையை ஓடவிட ஹாரி புரூக்!

Harry Brook Double Century: இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 202 ரன்கள் குவித்து, ODI கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் ஆனார். சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்து, பென் ஸ்டோக்ஸின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் தாண்டினார். புரூக்கின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ENG vs SL: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம்.. கில் சாதனையை ஓடவிட ஹாரி புரூக்!
ஹாரி புரூக்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Oct 2026 08:00 AM IST

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வரலாறு படைத்தார். இங்கிலாந்து அணிக்காக 4வது இடத்தில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஹாரி புரூக் (Harry Brook), ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யத் தொடங்கி, இலங்கை பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ச்சியான அழுத்தத்தை அளித்தார். இந்த போட்டியில் ஹாரி புரூக் தனது அரைசதத்தை வெறும் 42 பந்துகளில் நிறைவு செய்தார். பின்னர், 75 பந்துகளில் சதம் அடித்து, ஆட்டத்தை மேலும் அதிரடியாக மாற்றினார். தனது சதத்திற்குப் பிறகு, புரூக் வெறும் 97 பந்துகளில் 150 ரன்களை நிறைவுசெய்தார், பின்னர் 114 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்தார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை புரூக் பெற்றார். மேலும், சுப்மன் கில்லின் (Shubman Gill) சாதனையையும் முறியடித்தார்.

ALSO READ: இவ்வளவு பெரிய ரன் சேஸிங்கிற்கு இதுதான் உதவியது.. ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்ததற்கான இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் உலக சாதனையை ஹாரி புரூக் முறியடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 117 பந்துகளில் தனது இரட்டைச் சதத்தை நிறைவு செய்தார். அதே நேரத்தில், புரூக் அவரை விட 3 பந்துகள் குறைவாகவே இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியின்போது ஹாரி புரூக் தனது அபாரமான ஆட்டத்தில் 21 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் அடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரர்கள்:

வரிசை எண் பேட்ஸ்மேன்கள் ரன்கள் (பந்துகள்) 200 அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள் அணி எதிரணி நாள்
1 ஹாரி புரூக் 202 (116 பந்துகள்) 114 இங்கிலாந்து இலங்கை அக் 22, 2026
2 சுப்மன் கில் 223* (133 பந்துகள்) 117 இந்தியா வெஸ்ட் இண்டீஸ் செப் 30, 2026
3 இஷான் கிஷன் 210 (131 பந்துகள்) 126 இந்தியா வங்கதேசம் டிச 10, 2022
4 க்ளென் மேக்ஸ்வெல் 201* (128 பந்துகள்) 128 ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் நவ 7, 2023
5 பதும் நிஸான்கா 210 (139 பந்துகள்) 136 இலங்கை ஆப்கானிஸ்தான் பிப் 9, 2024

இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர்:

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஹாரி புரூக் பெற்றார். இதற்கு முன்பு எந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை. இதற்கு முன்னர், 2023-ல் நியூசிலாந்துக்கு எதிராக 182 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோருக்கான சாதனையை வைத்திருந்தார். தற்போது புரூக், ஸ்டோக்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.

ALSO READ: ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருது.. கௌரவத்தை பெற்ற கில், ஷஃபாலி!

  • ஹாரி புரூக் – இலங்கைக்கு எதிராக 202 ரன்கள்
  • பென் ஸ்டோக்ஸ் – நியூசிலாந்துக்கு எதிராக 182 ரன்கள்
  • ஜேசன் ராய் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180 ரன்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் – பாகிஸ்தானுக்கு எதிராக 171 ரன்கள்
  • ராபின் ஸ்மித் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 167* ரன்கள்

Follow Us