AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை ரீஸ்டோர் செய்வது எப்படி.. ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ!

How To Restore WhatsApp Chat History | வாட்ஸ்அப் செயலியை வேறு ஸ்மார்ட்போனுக்கு மாற்றும்போதோ அல்லது வேறு சில காரணங்களாலோ வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை ரீஸ்டோர் செய்வது எப்படி.. ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Sep 2026 18:53 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், ஆவணங்களை ஷேர் செய்வது என பலரும் முதன்மை தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப்பை கொண்டுள்ளனர். இத்தகைய மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் இருக்கும் சாட்கள் மிஸ் ஆனால் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆனால், அது குறித்து கவலைப்பட தேவையில்லை. காரணம், சாட்களை ரீஸ்டோர் செய்யும் வாய்ப்பை மெட்டா வழங்குகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

கூகுள் கணக்கில் உங்களது சாட்களை பேக் அப் எடுத்து வைக்கும் பட்சத்தில் உங்களால் எப்போது வேண்டுமானாலும், உங்களது சாட்களை ரீஸ்டோர் செய்துக்கொள்ள முடியும்.

  1. முதலில் கூகுள் ஒன் செயலியை திறக்க வேண்டும். பிறகு உங்களது கூகுள் கணக்கில் Sign In செய்ய வேண்டும்.
  2. பிறகு அங்கே கொடுக்கப்பட்டுள்ள Storage என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  3. உங்களது வாட்ஸ்அப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், அங்கே அவை பட்டியலிடப்பட்டு இருக்கும்.
  4. அதில் உங்களது சாட்கள் பேக் அப் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்தால், ரீஸ்டோர் செய்யும் பணிகளை தொடங்கலாம்.

இதையும் படிங்க : நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?

ஒருவேளை உங்களின் சாட்கள் கூகுள் கணக்கில் பேக் அக் எடுக்கப்படவில்லை என்றால், ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு உங்களால் சாட்களை மாற்றம் செய்துக்கொள்ள முடியும்.

கூகுள் கணக்கில் இருந்து சாட் ஹிஸ்டரியை ரீஸ்டோர் செய்ய

  1. வாட்ஸ்அப் செயலியை Uninstall செய்துவிட்டு பிறகு Reinstall செய்ய வேண்டும்.
  2. பிறகு அதில் கொடுப்பட்டு இருக்கும் Restore என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. உங்களுக்கு Restore செய்ய வேண்டாம் என்றால் Skip என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்களது வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us