AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் நாளே வெளிநடப்பு செய்த போட்டியாளர் முனியம்மா – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளர்களிள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இந்த பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் நாளே வெளிநடப்பு செய்த போட்டியாளர் முனியம்மா – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் முனியம்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2026 12:52 PM IST

தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசன் முதல் 7-வது சீசன் வரை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை 8-வது சீசனில் இருந்து தற்போது வரை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி போட்டியாளர்கள் சாதிகா, லக்‌ஷ்மி பிரியா, பிரித்விநாத், ஜான்சன், ஜாவித்,முனியம்மா, முத்தழகி, ஷாமா, அஸ்மிதா, ப்ளாக் பாண்டி, அவிநாஷ், கேபிஒய் வினோத், சாவின்யா, குமரன், சாந்தினி, ராகவ், முகேஷ், தன்யா மற்றும் அன்சர் ஆகியோர் உள்ளனர்.

மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில் முதல் நாளிலேயே போட்டிகளை தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு. அதன்படி முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்கான கேப்டன் போட்டியில் சாத்விகா வெற்றிப் பெற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

பிக்பாஸ் தமிழில் முதல் நாளே வெளிநடப்பு செய்த முனியம்மா:

அதனைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது புரோமோ வீடியோவை அடுத்தடுத்து வெளியிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி குழு இந்த முறை வீட்டில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஜனநாயக அறைவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கேப்டனை தவிர்த்து மற்றவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பேசும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டின் கேப்டனுக்கும் போட்டியாளர் முனியம்மாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த அறையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி முனியம்மா அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கிளேடியேட்டர்ஸ் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்வது அஜித் குமாரின் ப்ளான் – சுரேஷ் சந்திரா

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Actor Black Pandi Profile: பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் நுழைந்த அங்காடி தெரு பட நடிகர் ப்ளாக் பாண்டி – வைரலாகும் வீடியோ

Follow Us