AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெற்றிநடைப் போடும் பெத்தலேக குடும்ப யூனிட் படம்… ஓடிடி ரிலீஸை ஒத்திபோடும் படக்குழு!

Bethlehem Kudumba Unit Movie OTT Update | மலையாள சினிமாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெற்றிநடைப் போடும் பெத்தலேக குடும்ப யூனிட் படம்… ஓடிடி ரிலீஸை ஒத்திபோடும் படக்குழு!
பெத்தலேக குடும்ப யூனிட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 14:40 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படம் மலையாள சினிமாவில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து படக்குழு அந்த அந்த மாநிலங்களில் வெளியாகி அதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி ரிலீஸை ஒத்திப்போடும் பெத்தலேக குடும்ப யூனிட் படக்குழு:

இந்தியாவைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அது 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடப்படும். ஆனால் இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸை 6 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட உள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஐ அம் கேம்… துல்கர் சல்மானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமா? எக்ஸ் விமர்சனம் இதோ!

Follow Us