துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்திற்கு சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்
I Am Game movie got a censor issue | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்திற்கு சென்சார் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தனது சினிமா பயணத்தை மலையாள சினிமாவில் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் ஒரு பான் இந்திய நட்சத்திரமாகவே உள்ளார். இதன் காரணமாக இவரது நடிப்பில் எந்த மொழியில் படம் திரையரங்குகளில் வெளியானாலும் அது ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து பான் இந்திய மொழிகளில் படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் முதலாவதாக மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மானின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதன்படி வருகின்ற 03-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள ஐ அம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபலமாக உள்ள இயக்குநர் நவாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்திற்கு சென்சார் பிரச்சனை?
இந்தப் படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ள நிலையில் சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி உள்ள ஐ அம் கேம் படத்தின் ஏ சான்றிதழுக்குப் பதிலாக யு/ஏ சான்றிதழைப் பெறுவதற்காக, சூதாட்டம் தொடர்பான சில வார்த்தைகளையும் காட்சிகளையும் நீக்குமாறு ஐ அம் கேம் படக்குழுவிடம் தணிக்கை குழு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை படக்குழு ஏற்குமா இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.
Also Read… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது டிசி படம்… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#IamGame CENSOR ISSUES 🚨
The CBFC has reportedly asked the I’m Game team to remove certain words and visuals related to “#Gambling” in order to obtain a U/A certificate instead of an 🅰️ certificate.
Will the makers make the required changes? 👀🔥 pic.twitter.com/FKdKI1lH6u
— Movie Tamil (@_MovieTamil) September 1, 2026